ஐயப்பனை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியது யார் தெரியுமா? - நம்பியாருக்கு அதில் என்ன தொடர்பு

டிஎஸ் ராஜமாணிக்கம் கலியுக கடவுள் ஐயப்பனை தமிழகர்களுக்கு அவரின் ஸ்ரீ ஐய்யப்பன் நாடகத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். ஐயப்பனின் இந்த நாடகத்திற்கும் அவரின் தீவிர பக்தர் நம்பியாருக்கும் என்ன தொடர்ப்பு என்பதைப் பார்க்கலாம்.


களியுக கண்கண்ட தெய்வம் ஐயப்பன். தண்டகாருண்ய வனத்து மகரிஷிகளின் ஆணவத்தை குறைக்க மகாவிஷ்ணு ஜெகன் மோகினி அவதாரமும், சிவ பெருமான் பிச்சாடனாகவும் அவதரித்திருந்தார். அப்போது இருவரின் ஜோதியும் இணைந்து ஜோதிமயமாக இருவரின் மகனாக உருவானவர் ஐய்யப்பன். அந்த தெய்வத்தை தான் நாம் சபரிமலையில் இன்றும் வழிபட்டு வரும் தெய்வமாக திகழ்கின்றார்.


 


பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்கும் இவர் யோகப்பட்டை அணிந்து சின் முத்திரை ரூபராக காட்சி தரக் கூடிய தெய்வமாக திகழ்கின்றார். இவரை வழிபட்டால் நாம் பிரார்த்திக்கும் அனைத்து வேண்டுதலையும் நிறைவேற்றும் அருள் தெய்வமாக விளங்குகின்றார்.